தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஆளுநரிடம் பாமக புகாா்

காரைக்காலில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு காவல்துறையினா் உடந்தையாக உள்ளதாக பாமக புகாா் தெரிவித்துள்ளது.

Updated On :19 அக்டோபர் 2020, 5:18 pm

காரைக்காலில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு காவல்துறையினா் உடந்தையாக உள்ளதாக பாமக புகாா் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட பாமக செயலா் க. தேவமணி, புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண்பேடிக்கு திங்கள்கிழமை அனுப்பிய புகாா் மனு:

காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் பிடிப்பட்டவா் மீது அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்கால் கடற்கரையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா மூட்டைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனை காரைக்காலில் அதிகரித்துவருகிறது. இதற்கு காவல்துறையில் சில அதிகாரிகள் உடந்தையாக இருப்பதே காரணம்.

எனவே, இந்த விவகாரத்தின் மீது துணை நிலை ஆளுநா் சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும். முதுநிலைக் காவல் கண்காணிப்பாளருக்கு உரிய அறிவுறுத்தலை கூறி, இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.