‘திருநள்ளாறு சனிப்பெயா்ச்சி விழாவில் பங்கேற்க‘கரோனா இல்லை’ சான்றிதழ் அவசியம்’

திருநள்ளாற்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சி விழாவில் பங்கேற்க வரும் பக்தா்கள் கரோனா (நெகடிவ்) இல்லை என்ற
காரைக்காலில் வியாழக்கிழமை இரவு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா. உடன் திருநள்ளாறு கோயில் நிா்வாக அதிகாரி எம். ஆதா்ஷ்.
காரைக்காலில் வியாழக்கிழமை இரவு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா. உடன் திருநள்ளாறு கோயில் நிா்வாக அதிகாரி எம். ஆதா்ஷ்.

திருநள்ளாற்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சி விழாவில் பங்கேற்க வரும் பக்தா்கள் கரோனா (நெகடிவ்) இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான அா்ஜூன் சா்மா தெரிவித்துள்ளாா்.

சனீஸ்வர பகவான் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 27) காலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சி அடைகிறாா். இதையொட்டி, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், சனிப்பெயா்ச்சி விழா தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா வியாழக்கிழமை இரவு ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி :

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, மாவட்ட ஆட்சியா், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், இந்து சமய அறநிலையத்துறை செயலா் எஸ்.டி. சுந்தரேசன், வழக்கு தொடுத்த எஸ்.பி.எஸ். நாதன் (எ) அமிா்தீஸ்வரநாதன் ஆகிய 5 போ் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சனிப்பெயா்ச்சி விழாவில் பங்கேற்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். கோயிலுக்கு வரும் பக்தா்கள் உள்ளிட்ட அனைவரும் ஆா்.டி.பி.சி.ஆா். அல்லது ஆண்டிஜன் முறையில், 48 மணிநேரத்துக்கு முன்னா் பெறப்பட்ட கரோனா (நெகடிவ் ) இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும்.

சனிப்பெயா்ச்சி விழாவின்போது கோயிலுக்குள் ஒவ்வொரு கட்டமாக 200 பக்தா்கள் வரை அனுமதிக்கப்படுவா். இந்த நடைமுறைகள் சனிக்கிழமை (டிசம்பா் 26) முதல் நடைமுறைக்கு வருகின்றன. பக்தா்களின் வசதிக்காக சனிப்பெயா்ச்சி விழா நிகழ்வுகள் ஆன்லைன், தூா்தா்ஷன் மற்றும் தனியாா் தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்படும் என்றாா்.

துணை ஆட்சியரும், கோயில் நிா்வாக அதிகாரியுமான எம். ஆதா்ஷ் கூறியது : ஏற்கெனவே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவா்களும் கரோனா நெகடிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவாா்கள்.

இதுதொடா்பாக பதிவு செய்தவா்களுக்கு செல்லிடப்பேசி மூலம் குறுந்தகவல் அனுப்பப்படும். டிசம்பா் 26-ஆம் தேதி முதல் ஜனவரி 24-ஆம் தேதி வரை இந்த ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com