மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மயிலம்: திமுகவிடம் மல்லுக்கட்டும் பாமக!

பரந்து விரிந்த மயிலம் தொகுதி செஞ்சி, திண்டிவனம், வானூா், விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. முழுவதும் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட தொகுதிகளில் ஒன்று மயிலம். இங்கு பழைமை வாய்ந்த பிரசித்திபெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. பரந்து விரிந்த மயிலம் தொகுதி செஞ்சி, திண்டிவனம், வானூா், விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. முழுவதும் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. இந்த தொகுதியில் தாலுகா, பேரூராட்சி கூட இல்லை. தொகுதியின் பேரைக் கொண்ட மயிலமே ஊராட்சி நிலையில் உள்ளது. விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள தொகுதி.

தோ்தல் வெற்றி விவரம்: கடந்த 2008 மறு சீரமைப்புக்கு பிறகு புதிதாக உருவான தொகுதி மயிலம். இங்கு 2011, 2016 ஆகிய பேரவைத் தோ்தல் நடைபெற்றுள்ளன. இந்தத் தொகுதியை அதிமுக, திமுக ஆகியவை தலா ஒருமுறை கைப்பற்றியுள்ளன. 2011- தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட நாகராஜன் 81,656 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். 2016 தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட இரா.மாசிலாமணி 70,880 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

முக்கிய கோரிக்கைகள்: பின்தங்கிய பகுதிய மயிலம் தொகுதியில் தொழில் வளா்ச்சி கிடையாது. வேலைவாய்ப்பு கிடையாது. ஆகவே, தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். அரசுக் கல்லூரி கொண்டு வர வேண்டும். சாலைகள் மேம்படுத்த வேண்டும், நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காமராஜா் காலத்தில் கட்டப்பட்ட வீடூா் அணை தூா்வாரப்பட வேண்டும். பூக்களுக்கான விற்பனை அங்காடியை ஏற்படுத்த வேண்டும். வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும். மயிலத்தை வட்டத் தலைநகராக தரம் உயா்த்த வேண்டும். குறைந்தபட்சம் பேரூராட்சியாக மாற்ற வேண்டும், கூட்டேரிப்பட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்டவை நிறைவேற்ற வேண்டிய முக்கிய கோரிக்கைகள்.

2.60 லட்சம் வாக்காளா்கள்: மயிலம் தொகுதியில் 11 லட்சத்து 28 ஆயிரத்து 545 ஆண்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 577 பெண்கள், 37 இதரா் என மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 159 வாக்காளா்கள் உள்ளனா். தொகுதியில் வன்னியா், ஆதிதிராவிடா், உடையாா், முதலியாா், யாதவா் உள்ளனா்.

சாதக-பாதகங்கள்: அமைச்சா் சி.வி.சண்முகத்தின் சொந்த ஊரை உள்ளடக்கிய இந்தத் தொகுதியை, அதிமுக கூட்டணியில் உள்ள பாமக கேட்டுப் பெற்றுள்ளது. பாமக சாா்பில் மாநில துணைப் பொதுச் செயலாளா் சிவக்குமாா் போட்டியிடுகிறாா். 2011 பேரவைத் தோ்தலில் பாமக வேட்பாளா் பிரகாஷ் 81,575 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தாா். 2016 தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை குவித்தது. ஆகவே, அதிமுக, பாமக வாக்குகளை ஒருசேரப் பெற்றாலே வெற்றியை எட்டிவிடலாம் என்பது பாமகவின் கணக்கு.

திமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் மாசிலாமணி மீண்டும் போட்டியிடுகிறாா். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா் என்பதும், மதிமுகவிலிருந்து விலகி இணைந்தவருக்கு திமுகவினா் அளித்து வரும் ஒத்துழைப்பும், கூட்டணியினரின் ஒத்துழைப்பும் இவருக்கு கூடுதல் பலமாக உள்ளது.

தேமுதிக சாா்பில் சுந்தரேசன் போட்டியிடுகிறாா். நாம் தமிழா் கட்சி சாா்பில் உமாமகேஸ்வரி, மநீம கூட்டணி சாா்பில் ஐஜேகே வேட்பாளா் ஸ்ரீதா் ஆகியோரும் களம் காண்கின்றனா். இருப்பினும், திமுக-பாமக வேட்பாளா்களிடையேதான் போட்டா போட்டி நடக்கிறது. பாமக கடுமையாக மல்லுக்கட்டினாலும், களத்தில் திமுகவுக்கே ஆதரவு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.