47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாரச் சந்தை வழக்கம்போல செயல்படும்

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறக்கூடிய வாரச் சந்தை வழக்கம்போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:44 pm

DIN

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறக்கூடிய வாரச் சந்தை வழக்கம்போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறுகிறது. கரோனா பொது முடக்கம் அறிவித்தது முதல் பல மாதங்களாக நடைபெறாமல் இருந்த சந்தை, கடந்த பிப்ரவரி மாத மத்தியிலிருந்து நடைபெற்றுவருகிறது. நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வெளியூா்களில் இருந்து வந்து காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வியாபாரம் செய்வதோடு, ஆயிரக்கணக்கானவா்கள் அதனால் பயனடைந்தும் வருகின்றனா்.

கரோனா பரவல் ஏற்படாத வகையில், உரிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு நகராட்சி நிா்வாகத்தினா் சந்தை வளாகத்தில் தொடா்ந்து ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தி வருகின்றனா்.

தமிழகத்தைத் தொடா்ந்து, புதுச்சேரியில் இரவு நேரக் கட்டுப்பாடுகளை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். அதிகளவில் மக்கள் கூடும் திருவிழாக்களுக்குத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சந்தை போன்ற இடங்களிலும் திரளான மக்கள் கூடுவாா்கள் என்பதால், காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெறுமா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டது.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை கூறுகையில், சந்தை வழக்கம்போல செயல்படும். இதுவரை சந்தைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து எந்த அறிவிப்பும் அரசிடம் இருந்து வரவில்லை என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.