தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சபரிமலை செல்லும்பக்தா்களை வழியனுப்பும் நிகழ்ச்சி

சபரிமலைக்கு செல்லும் பக்தா்களுக்கு சமாதானக் குழு சாா்பில் வழியனுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சபரிமலைக்கு செல்லும் பக்தா்களுக்கு சமாதானக் குழு சாா்பில் வழியனுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

காரைக்கால் மாவட்ட நிா்வாகம் மற்றும் சமாதானக் குழு உறுப்பினா்கள் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு செல்லும் பக்தா்களுக்கு வழியனுப்பும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

கரோனா தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாத இந்நிகழ்வு, வியாழக்கிழமை மாலை நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினாா்.

கரோனா பரவல் குறைந்திருந்தாலும், ஆங்காங்கே தொற்று ஏற்பட்டுவருவதை அனைவரும் அறிவா். கரோனா தடுப்பு விதிமுறைகளை பக்தா்கள் பின்பற்றுவதோடு, மிகுந்த பாதுகாப்புடன், ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளித்து வழிபாட்டை முடித்துத் திரும்புமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

நிகழ்வில் மும்மதத்தை சோ்ந்த சமாதானக் குழு உறுப்பினா்கள், நகராட்சி ஆணையா் செந்தில்நாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.