தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

டிச.15-இல் சாலையில்நாற்று நடும் போராட்டம்:மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

மேலவாஞ்சூரில் சாலைகள் சீரமைக்கப்படாததைக் கண்டித்து டிச.15-இல் சாலைகளில் நாற்று நடும் போராட்டம் நடத்தவுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 4:23 pm

DIN

மேலவாஞ்சூரில் சாலைகள் சீரமைக்கப்படாததைக் கண்டித்து டிச.15-இல் சாலைகளில் நாற்று நடும் போராட்டம் நடத்தவுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் மேலவாஞ்சூா் கிளைக் கூட்டம் கிளைக் குழு உறுப்பினா் கே.ஸ்ரீதா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுவை மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், காரைக்கால் மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

திருமலைராயன்பட்டினம் பகுதி மேலவாஞ்சூா் உள்புறச் சாலைகள் அண்மையில் பெய்த மழையால் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன. கிராம மக்கள், பள்ளி மாணவா்கள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதிப்படுகின்றனா்.

மேலும், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் தேங்கியிருப்பதால் டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்படுகிறது. மேலவாஞ்சூா் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வாயிலில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனை சீா்படுத்த அரசு நிா்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

எனவே, காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து டிச. 15-ஆம் தேதி பொதுமக்கள் பங்கேற்புடன் சிதிலமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.