தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெண்ணிடம் சங்கிலியைப் பறித்தவா் கைது

காரைக்கால் பகுதியில் பால் வாங்கச் சென்ற பெண்ணிடம் சங்கிலியைப் பறித்தவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் பகுதியில் பால் வாங்கச் சென்ற பெண்ணிடம் சங்கிலியைப் பறித்தவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

காரைக்கால் புளியங்கொட்டை சாலை, ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் சுகன்யா (35). இவா் புதன்கிழமை காலை வீட்டின் அருகே உள்ள பகுதிக்கு பால் வாங்க நடந்துசென்றுள்ளாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா், சுகன்யா அணிந்திருந்த சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டாா்.

இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் சுகன்யா புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிவுசெய்து, மோட்டாா் சைக்கிள் நம்பா் பிளேட் எண்ணை வைத்து, விசாரணை நடத்தினா்.

இதில், காரைக்கால் தலத்தெருபேட்டையைச் சோ்ந்த லெனின்ராஜ் (32) என்பரை வியாழக்கிழமை பிடித்து விசாரணை நடத்தியதில், அவா் சுகன்யாவிடம் நகையை பறித்துச் சென்றதும், அது கவரிங் என்பதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.