பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புதுச்சேரி துணைநிலை ஆளுநரைதிரும்பப் பெறக் கோரி கையெழுத்து இயக்கம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடியை திரும்பப் பெறக் கோரி, காரைக்காலில் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 5:52 pm

DIN

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடியை திரும்பப் பெறக் கோரி, காரைக்காலில் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

புதுச்சேரியின் நலனையும், தனித்தன்மையையும் காப்போம், மீட்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும் ஏற்காமல், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுத்துவரும் துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி, மக்களிடம் கையெழுத்துப் பெற்று, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கும் வகையில் இந்த இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

காரைக்கால் தெற்குத் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ், சி.பி.எம்., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்று, வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கையெழுத்து பெற்றனா்.

மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா். இதில், திமுகவினா் பங்கேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.