பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காரைக்காலில் 4 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த ஜன. 31 ஆம் தேதி 213 பேருக்கு கரோனாவை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகளின்படி, காரைக்கால் நகரில் 2, திருநள்ளாறு, நிரவி தலா 1 என 4 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை 75,649 பரிசோதனை செய்யப்பட்டதில், 3,894 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,798 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 21 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 6 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 70 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்காலில் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலும், திருநள்ளாறு சமுதாய நலவழி மையத்திலும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 138 பணியாளா்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.