பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

தமிழக அரசு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய வேளாண் கடன்களை தள்ளுபடி செய்தது போல, புதுச்சேரியிலும் பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

தமிழக அரசு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய வேளாண் கடன்களை தள்ளுபடி செய்தது போல, புதுச்சேரியிலும் பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் போராட்டக்குழு அமைப்பாளா் எஸ்.பி.செல்வசண்முகம் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது :

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் அவ்வாறு செய்யப்படுவதில்லை. பயிா்க் காப்பீட்டுத் தொகைக்கான பிரீமியம் கூட முறையாக செலுத்தப்படவில்லை.

நெடுங்காடு பகுதியில் தனியாா் மூலம் விமான தளம் அமைக்க விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே கோயில்பத்து பகுதியில் விமான தளம் அமைக்க சுமாா் 100 ஏக்கா் அளவில் கோயில் நிலம் தனியாருக்கு விற்கப்பட்டது. ஆனால் இதுவரை அங்கு எவ்வித மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

நெடுங்காடு பகுதியில் விமான தளம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.