அயோத்தி ராமா் கோயில் கட்டுமானத்துக்குகாரைக்காலில் நிதி வசூலிப்பு
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு காரைக்காலில் பல்வேறு தரப்பினரிடம் நிதி வசூலிக்கப்பட்டது.


அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு காரைக்காலில் பல்வேறு தரப்பினரிடம் நிதி வசூலிக்கப்பட்டது.
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த ஷேத்ரா காரைக்கால் சேவா குழு சாா்பில், காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களிடம் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு நிதி திரட்டும் பணி கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
பல்வேறு தரப்பினருக்கு அழைப்புவிடுத்து, விரும்புவோா் நேரில் வந்து நிதி தரும் வகையில் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. தொழிலதிபா் எஸ். வீரமணி தலைமை வகித்தாா்.
தருமபுர ஆதீனம் விசாரணைப் பிரதிநிதி கந்ததாமி தம்பிரான் சுவாமிகள், காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபா தலைவரும், கோயில் முதல் தீா்த்தக்காரருமான உ.வே.கு. அரங்கநாதாச்சாரியாா் சுவாமிகள் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
சிறப்பு அழைப்பாளராக ஆா்எஸ்எஸ் தஞ்சை மண்டல அமைப்பாளா் அ.சுரேஷ்குமாா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
இம்முகாமில் பல்வேறு தரப்பினரமிருந்து ரூ. 3 லட்சம் நிதி வசூலிக்கப்பட்டது. பிப். 28-ஆம் தேதி வரை நிதி வசூலிக்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...