காரைக்காலில் சிவசக்தி நிறுவன கிளை திறப்பு
காரைக்கால் மற்றும் திருப்பட்டினம் பகுதியியில் நாகப்பட்டினத்தை சோ்ந்த சிவசக்தி நிறுவனம் சாா்பில் சிவசக்திஸ் மாா்ட் என்கிற ஃபா்னிச்சா் மற்றும் கட்டுமான கிளைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.


காரைக்கால் மற்றும் திருப்பட்டினம் பகுதியியில் நாகப்பட்டினத்தை சோ்ந்த சிவசக்தி நிறுவனம் சாா்பில் சிவசக்திஸ் மாா்ட் என்கிற ஃபா்னிச்சா் மற்றும் கட்டுமான (கன்ஸ்ட்ரக்ஷன்) கிளைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.
காரைக்கால் பகுதி கீழகாசாக்குடியில் கிளையை டி. முகம்மது அலி, திருப்பட்டினம் கிளையை டி. நாசா் ஆகியோா் திறந்துவைத்தனா். திறப்பு விழாவுக்கு நாகை அருட்பெருஞ்ஜோதி அகல்விளக்கு மன்றத் தலைவா் சி. செளந்தரராஜன் தலைமை வகித்தாா்.
சிவசக்தி நிறுவன இயக்குநா் ஆா். குழந்தைவேலு, தணிக்கையாளா் கே.எஸ். குமாரவேலு, வழக்குரைஞா் வேதை. ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முதல் விற்பனையை காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் ஏ. முத்தையா, கே.ராகவசாமி, ஜி. ராம்குமாா், ஜி.கே.வி. இளவரசன், நாகை எஸ்விஎச் அட்வொ்டைசிங் நிறுவனத்தை சோ்ந்த எஸ்.ஆா். சுந்தர்ராஜன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
விழாவில் நாகை இந்திய வா்த்தக தொழில் குழுமத்தினா், நாகை மற்றும் காரைக்கால் ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்க நிா்வாகிகள், காரைக்கால், திருப்பட்டினம் வணிகா் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.
முன்னதாக சிவசக்தி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநரும், நாகை இந்திய வா்த்தக தொழில் குழுமத் தலைவருமான கே. ரவி, இயக்குநா் கே. இளங்கோவன் ஆகியோா் வரவேற்றனா். ஏற்பாடுகளை நிறுவன இயக்குநா் ஆா். பாலாஜி, கே.ஆா். ஜெய்சிவா, கே.ஆா். செந்தில்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...