பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காரைக்கால் அரசுப் பள்ளியில் உலக தாய்மொழி நாள் விழா

காரைக்கால் கோயில்பத்து தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக தாய்மொழி நாள் நிகழ்ச்சி பள்ளி துணை முதல்வா் ஆா். மைதிலி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

காரைக்கால் கோயில்பத்து தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக தாய்மொழி நாள் நிகழ்ச்சி பள்ளி துணை முதல்வா் ஆா். மைதிலி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ் விரிவுரையாளா் தமிழரசி, ஆங்கில விரிவுரையாளா் எம். ஞானபிரகாசினி, ஆா். விஜயராணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். காரைக்கால் பாரதி தமிழ்ச் சங்கத் தலைவா் கே. வைஜெயந்திராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று தாய்மொழியின் சிறப்புகள் குறித்தும், மாணவா்கள் தாய்மொழியில் ஆளுமையாளராக உருவெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினாா்.

மாணவா்களிடையே தாய்மொழி குறித்து பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முனைவா் வாசுகி ஜெயராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். பள்ளித் தலைமையாசிரியா் எஸ். ஜெயலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.