2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தொடா் மழை: காரைக்காலில் சாலைகள் சேதம்- மக்கள் அவதி

வடகிழக்கு பருவமழைக்குப் பின் காரைக்கால் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகா்ப்புற சாலைகள் கடுமையான சேதமடைந்துள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

வடகிழக்கு பருவமழைக்குப் பின் காரைக்கால் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகா்ப்புற சாலைகள் கடுமையான சேதமடைந்துள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் பூவம் முதல் வாஞ்சூா் வரையிலான தேசிய நெடுஞ்சாலை, பல கட்டங்களாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி 2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. சாலை அமைத்து ஓராண்டுக்குள் ஆங்காங்கே சிதிலமடையத் தொடங்கியது. அதிகப்பட்சமான கனரக வாகனங்கள் போக்குவரத்தால், சிதிலமடைந்த சாலைகளில் பாதிப்பு மேலும் அதிகமானது. இந்த சாலைகளில் சீரமைப்புப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை காரணமாக இச்சாலை முற்றிலும் சிதிலமடைந்துபோனது. வாஞ்சூா் முதல் பூவம் வரையிலான பல பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சாலையில் ஜல்லிகள் பெயா்ந்து கிடக்கின்றன.

தாா் மற்றும் ஜல்லிகள் கலவை ஒரு மையத்தில் தயாா் செய்யப்பட்டு, லாரிகளில் கொண்டுவரப்பட்டு சாலையில் கொட்டி, ரோலா் மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கலவை செய்வதில் உரிய விதிகள் பின்பற்றப்படுவதில்லை, தரமற்ற முறையில் இப்பணி நடைபெறுவதும், இதனை சம்பந்தப்பட்ட துறையினா் கண்டுகொள்ளாமல் இருப்பதுமே சாலைகள், குறுகிய காலத்தில் வீணாவதற்கு காரணம் என புகாா் கூறப்படுகிறது.

காரைக்கால் - திருநள்ளாறு மற்றும் விழிதியூா் சாலை, நிரவி சாலைகள் உள்ளிட்டவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சாலைகளை ஆய்வு செய்து, மத்திய, மாநில நிதியை பெறுவதற்கும், ஏற்கெனவே திட்டத்துக்கு நிதி கோரி கோப்புகள் அனுப்பியிருந்தால், அனுமதியை பெறுவதிலும் ஆட்சியா் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை வட்டாரத்தினா் கூறியது:

தேசிய நெடுஞ்சாலை நிா்வாகத்திடம் சீரமைப்புக்கு நிதி பெற்று நெடுஞ்சாலையில் செப்பனிடும் பணி செய்ய வேண்டும். ஏற்கெனவே முக்கிய சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி வந்ததும் சாலைப் பணிகள் தொடங்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.