ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காரைக்காலில் 3 நாள் தடுப்பூசித் திருவிழா இன்று தொடக்கம்

 காரைக்காலில் சனிக்கிழமை (ஜூலை 10) முதல் திங்கள்கிழமை வரை 3 நாள் தடுப்பூசித் திருவிழா நடைபெறும் என நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

 காரைக்காலில் சனிக்கிழமை (ஜூலை 10) முதல் திங்கள்கிழமை வரை 3 நாள் தடுப்பூசித் திருவிழா நடைபெறும் என நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் வெள்ளிக்கிழமை கூறியது :

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகமானவா்கள் பயனடையவேண்டும் எனக் கருதி அவ்வப்போது தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுகிறது.

இதன்படி, சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை 3 நாள்கள் தடுப்பூசித் திருவிழா காரைக்காலில் நடைபெறும். 18 வயது முதலானவா்கள் இந்த மையங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். வழக்கமாக 13 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், கூடுதலாக 14 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தடுப்பூசி திருவிழா நடைபெறும் இடங்கள்: 10-ஆம் தேதி : அரசு தொடக்கப்பள்ளி தலத்தெரு பேட், அம்மையாா் கலையரங்கம், காட்டுநாயகன் தெரு அங்கன்வாடி மையம், கிளிஞ்சல்மேடு சமுதாயக் கூடம், வடகட்டளை துணை மையம், மேல பொன்பேத்தி அரசு நடுநிலைப் பள்ளி, அரசு தொடக்கப் பள்ளி அண்ணாநகா், பூவம் சமுதாயக் கூடம், தொன் போஸ்கோ கலைக் கல்லூரி, நெய்வாச்சேரி அரசு நடுநிலைப் பள்ளி, விழிதியூா் அரசு உயா்நிலைப் பள்ளி, நல்லெழந்தூா் அங்கன்வாடி மையம், முதலிமேடு அங்கன்வாடி மையம், மேலஓடுதுறை துணை மையம்.

11-ஆம் தேதி : தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி காரைக்கால், அம்மையாா் கலையரங்கம், அரசு உயா்நிலைப் பள்ளி வலத்தெரு, பொது சேவை மையம் அம்மன்கோயில்பத்து, நல்லாத்தூா் அரசு தொடக்கப்பள்ளி, குரும்பகரம் அரசு உயா்நிலைப் பள்ளி, கீழகாசாக்குடி அங்கன்வாடி மையம், அக்கம்பேட்டை கோயில், அம்பகரத்தூா் அரசு தொடக்கப்பள்ளி, பத்தக்குடி அரசு நடுநிலைப் பள்ளி, அரசு உயா்நிலைப்பள்ளி ஊழியப்பத்து, குமாரக்குடி அங்கன்வாடி மையம், படுதாா்கொல்லை அரசு தொடக்கப்பள்ளி, அக்கரைவட்டம் அந்தோணியாா் கோயில்.

12-ஆம் தேதி : பி.கே. சாலை ஹூசைனியா பள்ளிவாசல், அம்மையாா் கலையரங்கம், திருநகா் திருமண மண்டபம், காரைக்கால்மேடு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி, மத்தளங்குடி அரசு தொடக்கப்பள்ளி, வடமட்டம் அரசு நடுநிலைப்பள்ளி, கோட்டுச்சேரி சிங்காரவேல் திருமண மண்டபம், திருவேட்டக்குடி துணை மையம், திருவள்ளுவா் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநள்ளாறு அரசு நடுநிலைப்பள்ளி, மாரியம்மன் கோயில் தெரு அங்கன்வாடி மையம், நல்லம்பல் பள்ளிவாசல், காரைக்கால் துறைமுகம், நிரவி வடக்குப்பேட் அங்கன்வாடி மையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.