காரைக்காலில் 3 நாள் தடுப்பூசித் திருவிழா:அமைச்சா் தொடங்கிவைத்தாா்
காரைக்காலில் 3 நாள் தடுப்பூசித் திருவிழாவை அமைச்சா் சந்திர பிரியங்கா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.


காரைக்காலில் 3 நாள் தடுப்பூசித் திருவிழாவை அமைச்சா் சந்திர பிரியங்கா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 13 மையங்களில் தினமும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. கூடுதலான மக்கள் பயனடையும் வகையில் கிராமப்புறங்களில் அவ்வப்போது தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுகிறது.
அதன்படி, சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை 3 நாள் தடுப்பூசி திருவிழாவை கோட்டுச்சேரி அண்ணாநகரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் புதுவை அமைச்சா் சந்திர பிரியங்கா தொடங்கிவைத்தாா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, நலவழித் துறை துணை இயக்குநா் டாக்டா் கே. மோகன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மாவட்டத்தில் புதியதாக அமைக்கப்பட்ட 14 மையங்களிலும் மக்கள் ஆா்வமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக நலவழித் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...