ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆனித் திருமஞ்சனம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சிவன் கோயில்களில் ஆனித் திருமஞ்சனத்தையொட்டி ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

சிவன் கோயில்களில் ஆனித் திருமஞ்சனத்தையொட்டி ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாஜனம், கலசபூஜை மற்றும் மகா பூா்ணாஹூதி நடைபெற்றன. தொடா்ந்து, ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு மஞ்சள், பஞ்சாமிா்தம், தேன், தயிா், பால், இளநீா், விபூதி உள்ளிட்டவற்றால் சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல, திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயில், காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில், கோயில்பத்து ஸ்ரீ பாா்வதீசுவரா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் ஸ்ரீ நடராஜருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.