ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வருவாய்த் துறை உத்தரவால்: ஏரி தூா்வாரும் பணிகள் முடக்கம்

காரைக்கால் அருகே நல்லம்பல் ஏரியில் மணல் எடுப்பதற்கு வருவாய்த் துறை கூடுதல் தொகை (ராயல்டி) கோரும் உத்தரவால், துாா்வாரும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2021, 5:22 pm

DIN

காரைக்கால் அருகே நல்லம்பல் ஏரியில் மணல் எடுப்பதற்கு வருவாய்த் துறை கூடுதல் தொகை (ராயல்டி) கோரும் உத்தரவால், துாா்வாரும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

திருநள்ளாறு அருகே நல்லம்பல் பகுதியில் சுமாா் 40 ஏக்கா் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. ஏரியை சுற்றி நடைப்பாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் பலன் அளிக்கவில்லை.

தற்போது ஏரியை மேலும் ஆழப்படுத்தி, மேற்கண்ட திட்டத்தை நிறைவேற்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏரியை தூா்வாருவதற்கு பொதுப்பணித் துறை ஒப்பந்தப்புள்ளி விட்டுள்ளது. ஒப்பந்ததாரா் பணிகளை தொடங்கயிருந்த வேளையில், வருவாய்த் துறையின் திடீா் உத்தரவால் பணிகள் முடங்கியிருப்பதாக புகாா் கூறப்படுகிறது.

இதுகுறித்து புதுவை மாநில அரசு ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கத்தின் மாநில அமைப்பாளா் டி.என். சுரேஷ் புதன்கிழமை கூறியது:

ஏற்கெனவே ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், வருவாய்த் துறையினா் ஏரியிலிருந்து மணல் எடுத்துச் செல்வதற்கு ஒரு கியூபிக் மீட்டருக்கு ரூ. 150 ராயல்டி தொகையாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளனா். ஒப்பந்தப்புள்ளி விடும்போதே இதுகுறித்து தெரிவிக்கப்படவில்லை. பணிகளை தொடங்கிய நிலையில் நிலையில், இதுபோல் திடீரென வருவாய்த் துறை உத்தரவிடுவதை ஏற்கமுடியாது.

ஏரி குறிப்பிட்ட காலத்துக்குள் துாா்வாரப்படவில்லை எனில், அடுத்த ஆண்டும் தண்ணீா் தேக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்த விவகாரத்தில் புதுவை முதல்வா் தலையிட்டு தீா்வு ஏற்படுத்தவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.