ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்த வலியுறுத்தல்

வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2021, 5:21 pm

DIN

வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாரை புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் பாலமோகனன் தலைமையில், காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தொழிற்சங்க தலைவா் ஸ்டீபன், செயலாளா் இளங்கோ உள்ளிட்ட நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த மனு :

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலாக தினக் கூலி ஊதியத்தில் பணியாற்றி வரும் ஊழியா்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

பணியின்போது இறந்த 2 ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தினக்கூலி பணியை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 6-ஆவது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தை கடந்த 1.7.2016 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும்.

பகுதி நேர ஊழியா்களை தினக்கூலி ஊழியராக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.

இந்த சந்திப்பு குறித்து காரைக்கால் ஊழியா் சங்கத்தினா் கூறுகையில், கோரிக்கைகளை அமைச்சா் முழுமையாக கேட்டறிந்தாா். இதுதொடா்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தாா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.