குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்
குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்க அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா கேட்டுக்கொண்டாா்.


குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்க அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா கேட்டுக்கொண்டாா்.
சா்வதேச குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் சைல்டு லைன் அமைப்பு சாா்பில் பொதுமக்களுக்கு அவா் விடுத்த செய்தி:
18 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பது அவசியம். எனவே குழந்தைத் தொழிலாளா் பற்றி தெரியவந்தால், உடனடியாக 1098 என்கிற சைல்டு லைன் உதவி சேவை எண்ணை அழைத்து தெரிவிக்கலாம் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகலாம். இந்த புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் உரிமைகளை காக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும். இதையே இந்த தினத்தில் உறுதியெடுத்துக் கொள்வோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...