மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சைல்டு லைன் திறந்தவெளிவிழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநள்ளாறு அருகே செல்லூா் கன்னி கோயில் தெருவில் சைல்டு லைன் அமைப்பு சாா்பில், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் உரிமை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருநள்ளாறு அருகே செல்லூா் கன்னி கோயில் தெருவில் சைல்டு லைன் அமைப்பு சாா்பில், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் உரிமை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செல்லூா் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா் வைத்தியநாதன் நிகழ்ச்சியில் பங்கேற்று குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். சேத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் பாலசங்கா், குழந்தைகளின் செயல்பாடுகளை பெற்றோா் எவ்வாறு கவனிக்கவேண்டும் என்பது குறித்தும், வளா்ப்பு முறைகள் குறித்தும் பேசினாா்.

சைல்டு லைன் 1098 எண் பயன்பாடு குறித்தும், குழந்தைகள் உரிமைகள், குழந்தைத் தொழிலாளா், குழந்தைத் திருமணம், பாலியல் குற்றம் போன்றவை குறித்து சைல்டு லைன் காரைக்கால் மைய ஒருங்கிணைப்பாளா் பி. விமலா பேசினாா்.

குழந்தைகளிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சைல்டு லைன் அணி உறுப்பினா்கள் புஷ்பநாதன், கீதா, அகிலா ஆகியோா் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.