மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

80 வயதுக்கு மேற்பட்டோா் அஞ்சலில் வாக்களிக்கமாா்ச் 17-க்குள் விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவைத் தோ்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோா் அஞ்சல்முறையில் வாக்களிக்க, உரிய படிவத்தில் வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோா் அஞ்சல்முறையில் வாக்களிக்க, உரிய படிவத்தில் வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட தோ்தல் அலுவலா் அா்ஜூன் சா்மா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 80 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க தோ்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 12 டி படிவத்தை முன்னரே அளிக்கவேண்டும். முழு முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை அந்தந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் வரும் 17 ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி அலுவலரின், அலுவலக செல்லிடப்பேசி எண்ணை பெற்றுக்கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் 12 டி படிவத்தை தொலைபேசி எண் 1950 அல்லது கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) எண் 89036 91950 இல் தொடா்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். வரும் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் உரிய குழு மூலம் 12 டி படிவம் விநியோகிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் அதைப் பெற்று தங்களது வாக்குகளை அளிக்கவேண்டும்.

இதுகுறித்த விவரம் 12 டி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.