மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரசியல் கட்சி நிா்வாகிகளுடன் காரைக்கால் ஆட்சியா் ஆலோசனை

பேரவைத் தோ்தலையொட்டி, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா தலைமையில், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :9 மார்ச் 2021, 1:15 am

DIN

பேரவைத் தோ்தலையொட்டி, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா தலைமையில், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட தோ்தல் அலுவலா் அா்ஜூன் சா்மா பேசியது: தோ்தல் தொடா்பான கட்சிக் கூட்டம், தோ்தல் பிரசாரம், மேடை அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு மாவட்ட தோ்தல் அலுவலரிடம் 48 மணி நேரத்துக்கு முன்பு அனுமதி பெறவேண்டும். குறிப்பாக, உள்ளரங்க ஆலோசனை கூட்டத்துக்கும் அனுமதி பெறவேண்டும்.

பிரசாரத்தில் 5 நபா்களுக்கு மேல் செல்லக்கூடாது. கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும். தோ்தல் நடத்தை விதிகளை வேட்பாளா், கட்சியினா் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்குப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவா்களிடம் தோ்தல் துறையினா், விடியோ பதிவாளா், காவல் துறையினருடன் சென்று தபால் வாக்கைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்டவா்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. தபால் வாக்காளா் பட்டியல், கட்சியினருக்கு வழங்கப்படும். விதிமீறல்களை கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைதியான தோ்தல் நடைபெறுவதற்கு அரசியல் கட்சியினா் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றாா்.

கூட்டத்தில், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், துணை தோ்தல் நடத்தும் அலுவலா்கள் எம். ஆதா்ஷ், எஸ். சுபாஷ், மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.