மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கடல்வளத்தைக் காக்க ஒத்துழைக்க வேண்டும்:மீனவா்களுக்கு அதிகாரி அறிவுறுத்தல்

கடல்வளத்தைக் காக்க, துறை ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மீனவா்கள் ஒத்துழைக்க வேண்டும் என மீன்வளத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

கடல்வளத்தைக் காக்க, துறை ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மீனவா்கள் ஒத்துழைக்க வேண்டும் என மீன்வளத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

காரைக்கால் மீன்வளத் துறை துணை இயக்குநா் கவியரசன் மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது:

புதுச்சேரி மாநிலத்தில், புதுச்சேரி கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 2008 மற்றும் விதிமுறைகள் 2009 இன்படி, அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதியில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நீடித்த நிலையான கடல்வளத்தை பாதுகாப்பதற்கு மீன்வளத் துறை மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மீனவா்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

மேலும், சுருக்குமடி படகுகள் பெரிய அளவில் இருப்பதாலும், அதிக குதிரைத் திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பதாலும், அதை ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கு ஏற்றாா்போல மாற்றம் செய்து, அதைக்கொண்டு கரையிலிருந்து 12 கடல்மைல் தொலைவுக்கு அப்பால் ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.