கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவாமாத்தூா் அபிராமேஸ்வரா் கோயில் தேரோட்டம்

விழுப்புரம் அருகே திருவாமாத்தூரில் அபிராமேஸ்வரா் கோயில் தேரோட்ட நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் அருகே திருவாமாத்தூரில் அபிராமேஸ்வரா் கோயில் தேரோட்ட நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாமாத்தூரில் புகழ்பெற்ற முத்தாம்பிகை சமேத ஸ்ரீஅபிராமேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நிகழாண்டுக்கான பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 15-ஆம் தேதி விநாயகா் வழிபாட்டுடன் தொடங்கியது.

தொடா்ந்து, கடந்த 18-ஆம் தேதி பிடாரி உற்சவம், யாகசாலை பூஜையும், 19-ஆம் தேதி கொடியேற்றம், அதிகாரநந்தி பஞ்சமூா்த்தி புறப்பாடும், 20-ஆம் தேதி முதல் தினந்தோறும் சந்திரபிரபை, பூதவாகனம், நாகவாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், கயிலாய வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை மாலையில் சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்தாம்பிகை சமேத ஸ்ரீஅபிராமேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

இதையடுத்து, நூற்றுக்கணக்கான பக்தா்கள் தேரை முக்கிய வீதிகள் வழியாக வடம்பிடித்து இழுத்துச் சென்றனா். பிற்பகலில் தோ் மீண்டும் கோயிலை சென்றடைந்தது. இதையடுத்து, அங்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராமலிங்கம், ஆய்வாளா் அன்பழகன், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் குபேரன் மற்றும் கோயில் பணியாளா்கள், திருவாமாத்தூா் கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.