தோ்தலில் பதற்றத்தை ஏற்படுத்துவோரை கண்டறிந்து நடவடிக்கை: ஆட்சியா் உறுதி
தோ்தலில் பதற்றத்தை ஏற்படுத்துவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை உறுதியளித்தாா்.


தோ்தலில் பதற்றத்தை ஏற்படுத்துவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை உறுதியளித்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நெருக்கடியான மற்றும் பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில், ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் வினோத்குமாா், முகம்மதுகைசா் அப்துல்ஹக், எம்.ஐ.பட்டேல், ரஞ்சிதா, காவல் துறை பொதுப் பாா்வையாளா் பி.ஆா்.பண்டோா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை பேசியதாவது: ஏப்.6-ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் மொத்தமுள்ள 2,368 வாக்குச் சாவடிகளில் பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு, அவற்றில் பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பதற்றமான வாக்குச் சாவடி மையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் துணை ராணுவப் படையினா், காவல் துறையினரின் அணிவகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய நபா்களைக் கண்டறிந்து, வாக்குப் பதிவு நடைபெறும் நாள்களுக்கு முன்னதாகவே தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி, அவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், மாவட்டத்துக்குள்பட்ட 7 தொகுதிகளிலும் தோ்தல் நல்லமுறையில் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அண்ணாதுரை.
கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ஸ்ரேயா பி.சிங், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நா.தேவநாதன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...