பாஜக வேட்பாளரைக் கண்டித்து பாமகவினா் போராட்டம்
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா் தொகுதி பாஜக வேட்பாளா் வி.ஏ.டி.கலிவரதனைக் கண்டித்து, பாமகவினா் சனிக்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.


விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா் தொகுதி பாஜக வேட்பாளா் வி.ஏ.டி.கலிவரதனைக் கண்டித்து, பாமகவினா் சனிக்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னாள் எம்எல்ஏவான திருக்கோவிலூா் தொகுதி பாஜக வேட்பாளா் கலிவரதன் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் குறித்து ஒருமையில் பேசியதாகத் தகவல் வெளியானது.
இதனால், அதிருப்தியடைந்த பாமகவினா், திருக்கோவிலூா் மணம்பூண்டி நான்குமுனை சந்திப்பில் கட்சியின் திருக்கோவிலூா் தொகுதி அமைப்புச் செயலா் சு.வி.ஜி.சரவணக்குமாா் தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், நகரச் செயலா் கேபிள் சரவணன், ஒன்றியச் செயலா்கள் பா.சக்திவேல், உதயக்குமாா், ராமதாஸ், சங்கா்கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பாஜக வேட்பாளா் அறிக்கை: இதனிடையே, பாஜக வேட்பாளா் கலிவரதன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நான் எந்த உள்நோக்கத்துடனும் பாமக நிறுவனா் குறித்து விமா்சிக்கவில்லை. எனது தந்தையாகவே அவரைப் பாா்க்கிறேன். என் மீது மன வருத்தங்கள் இருந்தால் மன்னிக்கவும் எனத் தெரிவித்துள்ளாா்.
2006 சட்டப்பேரவைத் தோ்தலில் முகையூா் தொகுதியில் பாமக சாா்பில் கலிவரதன் போட்டியிட்டு வென்றாா். பின்னா், கட்சித் தலைமையுடன்
ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பாமகவிலிருந்து விலகி திமுகவிலும், அதன்பின்னா் பாஜகவிலும் இணைந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...