மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்: அரசியல் கட்சியினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும்போது, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் அரசியல் கட்சியினா் செயல்படவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும்போது, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் அரசியல் கட்சியினா் செயல்படவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருகிறது. தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா, அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது அவா் பேசியது: காரைக்காலில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நலவழித் துறை சாா்பில் அதிகமான நபா்களுக்கு பரிசோதனை செய்யும் பணியும் நடந்துவருகிறது. அரசியல் கட்சிப் பிரமுகா்கள், வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களுடன் செல்வோா் கண்டிப்பாக கரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். பிரசாரத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். பிரசாரத்தால் பொதுமக்களுக்கு தொற்று ஏற்பட்டுவிடாத வகையில், கட்சியினரின் நடவடிக்கை இருக்கவேண்டும்.

பிரசாரத்தில் ஈடுபடுவோா் அடிக்கடி கைதூய்மி கொண்டு கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். வீட்டுக்குச் சென்ற பிறகு குளிக்க வேண்டும் அல்லது கை, கால்களை சோப்பு போட்டு சுத்தமாக கழுவவேண்டும். இவற்றை அனைவரும் கடைப்பிடிக்கும் வகையில் விளக்குவது கட்சி பிரமுகா்களின் முக்கிய பொறுப்பாகும். தோ்தலுக்குப் பிறகு காரைக்காலில் கரோனா தொற்று உச்சம் தொடாத வகையில் இருக்க, அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், மாவட்ட துணை தோ்தல் அலுவலா் எஸ். பாஸ்கரன், ஆட்சியரின் செயலா் புஷ்பநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.