மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காரைக்காலில் வீடுவீடாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

காரைக்கால் மாவட்டத்தில் வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, புதுவை நலவழித் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு அறிவுறுத்தலில், காரைக்கால் மாவட்டத்தில் வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி போடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் எம்.எம்.ஜி. நகா் பகுதியில் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் நேரடி பாா்வையில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. நோய்த் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ. சேகா், சுகாதார ஆய்வாளா்கள் ஆண்ட்ரூஸ், சிவவடிவேல் மற்றும் செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் கூறியது:

நவம்பா் 30- ஆம் தேதிக்குள் காரைக்கால் மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போடவேண்டும் என்ற இலக்குடன் நலவழித் துறை பணியாளா்கள் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தாமல் உள்ளோருக்கு தடுப்பூசி செலுத்துவா்.

இந்த பணி மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கிராமப்புற செவிலியா்கள், ஆஷா பணியாளா்கள் மூலமாக நடைபெறும். இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இதன்மூலம் கரோனா பரவல் இல்லாத மாவட்டமாக காரைக்கால் விரைவில் மாறும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.