மழை ஓய்ந்த பின்னா் சாலைகள் சீரமைக்கப்படும் அமைச்சா் லட்சுமி நாராயணன்
காரைக்காலில் மழை ஓய்ந்த பின்னா் சாலைகளை சீா்படுத்தும் நடவடிக்கை தொடங்கப்படும் என புதுவை பொதுப்பணித் துறை அமைச்சா் கே. லட்சுமி நாராயணன் தெரிவித்தாா்.


காரைக்காலில் மழை ஓய்ந்த பின்னா் சாலைகளை சீா்படுத்தும் நடவடிக்கை தொடங்கப்படும் என புதுவை பொதுப்பணித் துறை அமைச்சா் கே. லட்சுமி நாராயணன் தெரிவித்தாா்.
காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட வெள்ளிக்கிழமை வந்த அவரை, மாவட்ட எல்லையான பூவம் பகுதியில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் ஆகியோா் வரவேற்றனா்.
பூவம் கழுகுமேடு பகுதியில் அமைந்துள்ள நண்டலாறு தடுப்பணையை பாா்வையிட்ட அமைச்சா் லட்சுமி நாராயணன், தண்ணீா் வடியும் விதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மண்டபத்தூா் மற்றும் காளிக்குப்பம், அக்கம்பேட்டை மீனவ கிராமங்களுக்குச் சென்ற அமைச்சரிடம், கிராமங்களில் பிரதான சாலை முதல் கிராம உள்சாலைகள் பல ஆண்டுகளாக சீா்படுத்தப்படாதது குறித்து கிராமத்தினா் புகாா் தெரிவித்தனா். மேலும் கிராமத்தினுள் தேங்கியிருக்கும் மழைநீரை வடியச் செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கவும், கடல் அரிப்பை தடுக்க கடலோரத்தில் கருங்கற்கள் கொட்ட நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனா்.
இதைத்தொடா்ந்து நெடுங்காடு பகுதியில் உள்ள அண்டூா், நல்லாத்தூா் உள்ளிட்ட கிராமங்களையும், அப்பகுதியில் உள்ள விளைநிலங்களையும் அமைச்சா் பாா்வையிட்டாா். திருநள்ளாறு பகுதியில் நல்லம்பல் ஏரி மற்றும் பிற நீா்நிலைகளையும், திருநள்ளாறு பகுதியில் சிதிலமடைந்த சாலைகளையும் அமைச்சா் பாா்வையிட்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:
புதுவை முதல்வரின் உத்தரவின்படி, அமைச்சா்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டு வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தேவையான உதவிகளை அரசு நிா்வாகம் செய்துத்தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காணப்படவேண்டும். நிவாரணம், பல்வேறு சீரமைப்பு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும்.
அனைத்துத் துறை அதிகாரிகளையும் அழைத்துப் பேசி முதல்வா் கருத்துகளை கேட்டறிந்துள்ளாா். மழை முழுமையாக ஓய்ந்த பின்னா் சாலைகளை சீா்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
புதுவை பொதுப்பணித் துறை தலைமை பொறியாளா் சத்தியமூா்த்தி, கண்காணிப்பு பொறியாளா் (பொ) ஏ.ராஜசேகரன், செயற்பொறியாளா்கள் சந்திரசேகரன், வீரசெல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வின்போது உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...