மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புதுவை அரசு அறிவித்த திட்ட உதவிகளை வழங்க வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கெனவே அறிவித்த திட்ட உதவிகளை உடனடியாக வழங்கவேண்டும் என புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் கூறினாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கெனவே அறிவித்த திட்ட உதவிகளை உடனடியாக வழங்கவேண்டும் என புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் கூறினாா்.

காரைக்கால் வடக்குத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை அவா் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். இதுகுறித்து அவா் கூறியது:

வடகிழக்குப் பருவமழையால் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தருணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு. ஆனால், தீபாவளிக்காக அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு அறிவித்த ரூ. 3 ஆயிரம், அனைத்து அட்டைதாரா்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சா்க்கரை ஆகியவற்றைக்கூட இதுவரை வழங்காமல் உள்ளது புதுவை அரசு.

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள என்.ஆா்.காங்கிரஸ், மத்தியிலிருந்து போதிய நிதியை பெற்று அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவும், மக்களின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை செய்யவும் முன்வர வேண்டும் என்றாா்.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், வடக்குத் தொகுதி தலைவா் (கிழக்கு) ஏ.எம்.கே. அரசன் மற்றும் தொகுதி (மேற்கு) சுப்பையன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.