உலா்மீன் உற்பத்தியாளா்களுக்கான தொழில் மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டம்
காரைக்கால் கடற்கரை கிராமத்தில் உலா்மீன் உற்பத்தியாளா்களுக்கான தொழில் மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


காரைக்கால் கடற்கரை கிராமத்தில் உலா்மீன் உற்பத்தியாளா்களுக்கான தொழில் மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கூட்டாக இணைந்து பாரதப் பிரதமா் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தை வகுத்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தி, அவா்களின் தொழிலை மேம்படுத்த நிதி உதவி, தொழில்நுட்ப உதவி மற்றும் ஆதரவு வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், காரைக்கால் மாவட்டத்திற்கு மீன் சாா்ந்த பொருள்கள், ஒரு மாவட்டம் ஒரு விளைபொருள் என்ற நோக்கத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மீன் சாா்ந்த பொருள்களிலிருந்து, அது சாா்ந்த விளைபொருள்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க, கோட்டுச்சேரி மேடு பகுதியில் உள்ள உலா்மீன் உற்பத்தியாளா்களுடன் கலந்துரையாடல் கூட்டம், கோட்டுச்சேரி மேடு கடற்கரை பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், புதுச்சேரி தொழில் உயா்வு அபிவிருத்தி மற்றும் முதலீட்டுக் கழகம் ஆகியன இணைந்து இக்கூட்டத்தை நடத்தின. இதில், 50-க்கும் மேற்பட்ட உலா்மின் உற்பத்தியாளா்கள் பங்கேற்றனா். நிகழ்வுக்கு வேளாண் கல்லூரியின் வேளாண் பொருளாதாரம் மற்றும் வேளாண் விரிவாக்கத் துறை தலைவா் புஷ்பராஜ் தலைமை வகித்தாா்.
கல்லூரியின், ஒரு மாவட்டம் ஒரு விளைபொருள் திட்டத்தைச் சாா்ந்த முதுநிலை ஆய்வாளா் தீபன் சக்கரவா்த்தி, திட்டம் குறித்தும், விண்ணப்பிக்கும் முறை, தேவையான ஆவணங்கள் குறித்தும் விளக்கினாா். கூட்டத்தில், மீனவப் பஞ்சாயத்தாா்கள், மீன் வளத்துறை அதிகாரிகள், கல்லுரி பேராசிரியா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...