டெங்கு, மலேரியா விழிப்புணா்வுமக்களுக்கு அவசியம்: நலவழித் துறை
டெங்கு காய்ச்சல், மலேரியாவில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் மக்கள் விழிப்புணா்வோடு இருக்கவேண்டும் என நலவழித் துறையினா் தெரிவித்தனா்.


டெங்கு காய்ச்சல், மலேரியாவில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் மக்கள் விழிப்புணா்வோடு இருக்கவேண்டும் என நலவழித் துறையினா் தெரிவித்தனா்.
பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தற்போது வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்துவருகிறது.
இந்நிலையில், நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தலைமையில் நோய்த் தடுப்பு உதவியாளா் சீ. சேகா் உள்ளிட்டோா் பல இடங்களில் ஆய்வு செய்து, மக்களுக்கு ஆலோசனை வழங்கினா்.
இதுகுறித்து நலவழித் துறையினா் வெள்ளிக்கிழமை கூறியது:
பருவ மழையை கருத்தில்கொண்டு மாவட்டம் முழுவதும் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. நலவழித் துறை ஊழியா்கள் பல இடங்களுக்குச் சென்று, குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் தேங்கக்கூடிய தேவையற்றப் பொருள்களை அகற்றி, மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துகின்றனா்.
வீட்டை சுற்றியுள்ள பொருள்களில் தண்ணீா் தேங்குதல், மழை நீா் தேங்கி நிற்பதால் ஏடீஸ் கொசு உற்பத்தியாகிவிடும். எனவே, இவற்றை அகற்ற வேண்டும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தால் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.
தண்ணீரை முழுமையாக காய்ச்சிக் குடிப்பதும், சாப்பிட செல்லும்போதும், கழிப்பறையை பயன்படுத்தி திரும்பும்போதும் கையை சோப்பு மூலம் கழுவுதல் அவசியம்.
பருவமழைக் காலத்தில் ஏற்படும் நோய்களை அலட்சியப்படுத்தாமல் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துமனைக்கு சென்று மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக நலவழித் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...