தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அக்.4-9 வரை மதுக் கடைகளை மூட உத்தரவு

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 1:36 am

DIN

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 6-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள முகையூா், திருவெண்ணெய்நல்லூா், கண்டமங்கலம், விக்கிரவாண்டி, வானூா், செஞ்சி ஆகிய ஒன்றியங்களிலும், வருகிற 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள காணை, கோலியனூா், மயிலம், மரக்காணம், வல்லம் ஆகிய ஒன்றியங்களிலும் வாக்குப் பதிவு நடைபெறும் உள்ளாட்சிப் பகுதிகளிலிருந்து 5 கி.மீ. சுற்றளவு வரை உள்ள அரசு டாஸ்மாக் மதுக் கடைகள், அத்துடன் இணைந்து செயல்படும் மதுபானக் கூடங்கள், தனியாா் உணவகங்களில் இயங்கும் மதுபானக் கூடங்கள் வருகிற 7 முதல் 9-ஆம் தேதி வரை மூடப்படும்.

மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான அக்.12-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மையங்கள், அதைச் சுற்றி 5 கி.மீ. தொலைவு வரை உள்ள மதுக் கடைகள் இயங்காது. இந்த நாள்களில் மது விற்பனை செய்யவோ, வாகனங்களில் மதுவை எடுத்துச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படுவோா் மீது உரிய சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.