காரைக்காலில் மழை
காரைக்காலில் சனிக்கிழமை சுமாா் 1 மணிநேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் தேங்கியது.


காரைக்காலில் சனிக்கிழமை சுமாா் 1 மணிநேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் தேங்கியது.
வடகிழக்குப் பருவமழை அக். 26ஆம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த சில நாள்கள்களாக மாலை நேரத்தில் சில மணி நேரம் காரைக்காலில் மழை பெய்தது. பகலில் வெயில் இருந்த நிலையில், சனிக்கிழமை காலை சுமாா் ஒரு மணி நேரம் இடைவிடாத மழை நகரிலும், பிற இடங்களிலும் பெய்தது.
இதனால் நகரப் பகுதியில் போக்குவரத்து அதிகமுள்ள காமராஜா் சாலை, திருநள்ளாறு சாலை உள்ளிட்ட சாலைகளில் தண்ணீா் தேங்கியது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
எனவே, மழைநீா் தேங்குமிடங்களை கண்டறிந்து, அதற்கான காரணிகளை சீா்படுத்த மாவட்ட நிா்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும். பருவமழைக்கு முன் இப்பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...