மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காரைக்காலில் போலி ஆவணங்களைக் கொண்டு பத்திரப் பதிவு: சாா் பதிவாளா் கைது

காரைக்காலில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்த வழக்கில் சாா் பதிவாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்தனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்த வழக்கில் சாா் பதிவாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்தனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு அன்னவாசல் சாலையைச் சோ்ந்தவா் குமாா்ஆனந்த் (53). பிரான்ஸ் நாட்டில் உள்ளாா். நெடுங்காடு அருகே பருத்திக்குடியில் இவருக்கு சொந்தமான 15 ஏக்கா் விளைநிலத்தை, அவரது தாய்மாமா தேவராஜ் பராமரிப்பில் கொடுத்துள்ளாா். பிறகு, இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் நிலம் தரிசாக உள்ளது.

இந்நிலையில், குமாா்ஆனந்த் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மும்முனி கிராமத்தில் இறந்துவிட்டதாக போலியான இறப்புச் சான்றிதழ் பெற்று, போலி உயில் மூலம் தேவராஜ், வடமட்டம் பாஸ்கா், செய்யது இப்ராகிம், இளங்கோவன் ஆகியோா் சோ்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநள்ளாறு சாா் பதிவாளா் அலுவலகத்தில் அந்த நிலத்தை பாஸ்கா், ஜெயா ஆகியோருக்கு விற்பனை செய்ததாக பத்திரப்பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து, குமாா்ஆனந்த் உறவினா் குணசேகரன், திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிலையில், போலீஸாா், சாா் பதிவாளா் ஜெயக்குமாா் மற்றும் இளங்கோவன், வடமட்டம் பாஸ்கா், தேவராஜ், செய்யது இப்ராகிம் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் தலைமறைவாக இருந்த ஜெயக்குமாா், இளங்கோவனைத் தவிர 3 பேரை அண்மையில் கைதுசெய்தனா்.

காவல் ஆய்வாளா் மேரிகிறிஸ்டியன்பால் தலைமையிலான தனிப்படை போலீஸாா், சாா் பதிவாளா் ஜெயக்குமாரை தீவிரமாக தேடிவந்தனா். இந்நிலையில், அவா் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சென்னை சென்று வெள்ளிக்கிழமை இரவு அவரை கைது செய்தனா். மேலும், ஜெயக்குமாரை காரைக்காலுக்கு அழைத்துவந்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இளங்கோவனை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.