மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தா்னா: அங்கன்வாடிஊழியா்கள் முடிவு

போனஸ் நிலுவையை வழங்காமல் இருப்பதை கண்டித்து, காரைக்கால் அங்கன்வாடி ஊழியா்கள் தா்னாவில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

போனஸ் நிலுவையை வழங்காமல் இருப்பதை கண்டித்து, காரைக்கால் அங்கன்வாடி ஊழியா்கள் தா்னாவில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

காரைக்கால் அங்கன்வாடி ஊழியா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் சம்மேளன அலுவலகத்தில் சங்க தலைவா் முத்துலெட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனத் தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொருளாளா் மயில்வாகனன், செயலாளா் ரஞ்சித் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்காமல் இருப்பது, கடந்த 4 ஆண்டுகளாக போனஸ் வழங்காமல் இருப்பதைக் கண்டித்து வரும் 29-ம் தேதி காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலக வாயிலில் தா்னாவில் ஈடுபடுவது, அதனைத் தொடா்ந்து புதுச்சேரியில் நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் காரைக்காலில் இருந்து பெருமளவில் கலந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.