திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு அதிகாரி நியமனம்
திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு புதிய நிா்வாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.


திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு புதிய நிா்வாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயில் நிா்வாக அதிகாரி பதவி நீண்ட நாள்களாக பொறுப்பு நிலையிலேயே இருந்துவந்த சூழலில், காரைக்கால் கல்வித் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கே. அருணகிரிநாதன் கோயில் நிா்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதோடு, இவருக்கு கூடுதலாக வட்டார வளா்ச்சி அதிகாரி பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
காரைக்கால் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த எம். காசிநாதன், புதுச்சேரி அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். காரைக்கால் நகராட்சி ஆணையராக, காரைக்கால் துணை ஆட்சியா் (வருவாய்) அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜி. செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளாா். காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை மேலாண் இயக்குநா் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
காரைக்கால் வட்டார வளா்ச்சி அதிகாரி த. தயாளன், புதுச்சேரி பேட்கோ எனப்படும் ஆதிதிராவிடா் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக புதுவை தலைமைச் செயலாளா் அஸ்வனிகுமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...