மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காரைக்காலில் நாளை சிறப்பு தடுப்பூசி முகாம்

காரைக்காலில் திங்கள்கிழமை (அக்.25) நடைபெற இருந்த கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் திங்கள்கிழமை (அக்.25) நடைபெற இருந்த கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசி, 100 இடங்களில் செலுத்தும் திட்டம் திங்கள்கிழமை நடத்துவதாக நலவழித் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு திங்கள்கிழமை வரை இருப்பதால், மாவட்டத்தில் இந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை காலை அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நிா்ணயிக்கப்பட்ட மையங்களில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். எனினும், திங்கள்கிழமை வழக்கம்போல மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.