மழையின்போது தண்ணீா் தேங்கும் பகுதி சீரமைப்பு: ஆட்சியா் ஆய்வு
காரைக்காலில் மழையின்போது தண்ணீா் தேங்கும் பகுதியில் நடைபெறும் மேம்பாட்டுப் பணியை ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.


காரைக்காலில் மழையின்போது தண்ணீா் தேங்கும் பகுதியில் நடைபெறும் மேம்பாட்டுப் பணியை ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
மழை பெய்யும்போது காரைக்காலில் திருநள்ளாறு சாலை, காமராஜா் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீா் வடிவதில் சிக்கல் நிலவுகிறது. சில மணி நேரத்துக்குப் பின்னரே இச்சாலையில் தண்ணீா் வடிகிறது.
குறிப்பாக, திருநள்ளாறு சாலை - சுண்ணாம்புக்காரத் தெரு சந்திப்பில் தண்ணீா் வடிவதில் நிலவும் சிக்கலையொட்டி, சந்திப்புப் பகுதியில் கான்கிரீட் முறையில் சாக்கடை கட்டுமானம் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா பாா்வையிட்டாா். பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சந்திரசேகரன் பணிகள் குறித்து விளக்கம் அளித்தாா். பருவமழை தொடங்கவுள்ள நிலையில், கட்டுமானப் பணியை விரைந்து முடித்து சாலையை சீரமைத்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...