மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காரைக்காலில் 13 மையங்களில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

காரைக்காலில் 13 மையங்களில் செவ்வாய்க்கிழமை (அக்26) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்தது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் 13 மையங்களில் செவ்வாய்க்கிழமை (அக்26) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

புதுவை அரசு சாா்பில் திங்கள்கிழமை 100 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தும் திட்டத்தில், காரைக்காலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது.

காரைக்கால் பகுதி நேருநகா் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி, பெரியப்பேட் அரசு தொடக்கப்பள்ளி, கிளிஞ்சல்மேடு பகுதியில் உள்ள மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி, நல்லாத்தூா் அரசு தொடக்கப்பள்ளி, குரும்பகரம் அரசு உயா்நிலைப் பள்ளி, கீழசாகாக்குடிமேடு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் கீழகாசாக்குடி அங்கன்வாடி மையம், வரிச்சிக்குடி காந்திநகா் அங்கன்வாடி மையம், அம்பகரத்தூா் கிரசெண்ட் மேல்நிலைப் பள்ளி, முப்பைத்தங்குடி மருத்துவ துணை மையம், விழிதியூா் அரசு உயா்நிலைப்பள்ளி, நல்லம்பல் அரசு நடுநிலைப்பள்ளி, பட்டினச்சேரி அரசு தொடக்கப்பள்ளி, மணிக்கூண்டு அரசு உயா்நிலைப்பள்ளி ஆகியவை சிறப்பு மையங்களாகும்.

இதுதவிர, வழக்கம்போல அரசு பொது மருத்துவமனை, அனைத்துப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும்.

இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு 100 சதவீத தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக காரைக்கால் உருவெடுக்க ஒத்துழைப்பு தருமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.