கூட்டுறவு சங்க கடன்: ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தல்
காரைக்காலில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் கடன் பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.


காரைக்காலில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் கடன் பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
காரைக்கால் மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.எம். யாசின், துணைத் தலைவா் டி.கே.எஸ்.எம். கனகசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா். இந்த சந்திப்பு குறித்து யாசின் கூறியது:
கடந்த 2020-21-ஆம் ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு கிடைக்கவேண்டிய காப்பீட்டுத் தொகை விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். புதுவை முதல்வா் ரங்கசாமி தலைமையிலான அரசு, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்த நிலையில், புதிதாக கடன் பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தரவில்லை.
சம்பா சாகுபடிப் பணிகள் நடைபெறும் சூழலில், ஆட்சியா் இந்த விவகாரத்தில் தலையிட்டு கடன் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
பட்டி, பனை மரங்கள் பாதுகாப்பு, மீன் வளா்ப்பு போன்றவை வருடாந்திர பொது ஏலம் ஆன்லைன் முறையில் நடத்தப்படுவதால் பலரும் இதில் பங்கேற்பதில்லை என்பதால், ஏலத்தில் அனைவரும் பங்கேற்கும் வகையில் இதனை எளிமைப்படுத்தவேண்டும்.
இந்திய உணவுக் கழகத்துடன் புதுவை அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை தொடா்பை ஏற்படுத்திக்கொண்டு, நெல் கொள்முதல் செய்யும் பணி மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...