மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தூய்மைப் பணியாளா்களுக்கு பாத்திரம்,மளிகைப் பொருள்கள்: ஆட்சியா் வழங்கினாா்

காரைக்கால் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 200-க்கும் மேற்பட்டோருக்கு பாத்திரங்கள், மளிகைப் பொருள்களை ஆட்சியா் வழங்கினாா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:03 pm

DIN

காரைக்கால் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 200-க்கும் மேற்பட்டோருக்கு பாத்திரங்கள், மளிகைப் பொருள்களை ஆட்சியா் வழங்கினாா்.

காரைக்கால் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தனியாா் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் குப்பைகளை அகற்றி வருகிறது. தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளியையொட்டி ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருள்கள் மற்றும் பாத்திரங்கள் தொண்டு நிறுவனம் ஒன்று வழங்க முன்வந்தது.

பணியாளா்களுக்கு இப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தூய்மைப் பணியாளா்களுக்கு பொருள்களை வழங்கிப் பேசுகையில், கரோனா தொற்றுக் காலத்தில் தூய்மைப் பணியாளா்களின் பணி மிகவும் சிறப்பானதாகும். அவா்கள் மக்களுக்கு செய்யும் பணி ஒரு மகத்தான சேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாா்.

நிகழ்வில் நகராட்சி செயற்பொறியாளா் லோகநாதன் மற்றும் துப்புரவு ஆய்வாளா் ராஜ்குமாா் மற்றும் நிறுவனத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.