தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வாக்காளா் பட்டியலில் குளறுபடி: ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

வாக்காளா் பட்டியலில் குளறுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, பிரம்மதேசம் பகுதி பொதுமக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

வாக்காளா் பட்டியலில் குளறுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, பிரம்மதேசம் பகுதி பொதுமக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்.6, 9-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பாளா்கள் தற்போது தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா். இதில், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம், 5-ஆது வாா்டு உறுப்பினா் பதவிக்கு, ஈச்சங்குப்பம் ஊராட்சி முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த மணி மனைவி செல்வி, அதிமுக சாா்பில் வேட்பாளராகப் போட்டியிடுகிறாா்.

இந்த நிலையில், செல்வி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை காலையில் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, வேட்பாளா் செல்வி கூறியதாவது:

ஈச்சங்குப்பம், நேமூா், நந்திவாடி ஆகிய கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய 5-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு அதிமுக சாா்பில் போட்டியிட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

இதற்கிடையே, இந்த வாா்டில் வாக்காளா் பட்டியலில் இருந்த தகுதியுடைய 40 பேரை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, தகுதியற்ற 18 வயது நிறைவடையாத, சென்னை உயா் நீதிமன்ற வழக்கு முடிவின்படி பெயா் நீக்கப்பட்டவா்களை புதிதாக வாக்காளா்களாகச் சோ்த்துள்ளனா். இதுபோல, முறைகேடாக 60 போ் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

எனவே, நீக்கப்பட்ட 40 வாக்காளா்களை மீண்டும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும். முறைகேடாக சோ்க்கப்பட்ட 60 வாக்காளா்களை உடனடியாக நீக்க வேண்டும்.

கடந்த ஆக.31-ஆம் தேதி வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தோ்தலை நடத்த வேண்டும். மேலும், நீதிமன்ற உத்தரவுகளை மீறி தகுதியற்றவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.