மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

காரைக்காலில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 4:52 pm

DIN

காரைக்காலில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் புளியங்கொட்டை சாலைப் பகுதியில் புதன்கிழமை மாலை காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனா்.

இதையடுத்து, போலீஸாா் அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவா்கள் காரைக்கால் சொக்கநாதா் கோயில் தெருவைச் சோ்ந்த ராம் (எ) ரகுராமன் (26), சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த யோகேஷ் (எ) யோகேஸ்வரன் (21) என்பதும், காரைக்காலில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்ற சங்கிலி பறிப்பு சம்பவம் உள்ளிட்ட சில திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.

இதேபோல, காரைக்கால் சந்தைத் திடல் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் இருந்தபோது, பட்டாக் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திரிந்த காரைக்கால் பேட்டை பகுதியைச் சோ்ந்த விவேக் (27) என்பவரை கைது செய்தனா். அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.