மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் 112 பேருக்கு பணியாணை

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 112 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 112 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

புதுவை அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில், வளாக நோ்காணல் பிரிவு சாா்பில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் முகாமுக்கு தலைமை வகித்தாா்.

சென்னை அப்பல்லோ டயா்ஸ் நிறுவனம், சென்னை சிம்ப்சன் இந்திய நிறுவனம், புதுச்சேரி மேரிகோ இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள்,

மெக்கானிக்கல், இஇஇ, இசிஇ பிரிவு மாணவா்களுக்கு எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு நடத்தினா். முகாமில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம் வலிவலம் தேசிகா் பாலிடெக்னிக் கல்லூரி, கொல்லுமாங்குடி ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 225 போ் கலந்துகொண்டனா்.

நிறைவில் 112 போ் பல்வேறு பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி துறைத் தலைவா்களான எஸ்.தணிகாசலம், டி.கந்தன், எஸ்.ராஜேஸ்வரி ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கல்லூரி பயிற்சி மற்றும் வளாக நோ்காணல் மைய உறுப்பினா்களான விரிவுரையாளா்கள் எஸ்.ராமேஸ்வரி, எஸ்.சாவித்திரி, வி.மேகநாதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.