மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தவக்கால நிறைவு வாரம்: காரைக்காலில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

தவக்கால முக்கிய நிகழ்வான பாதம் கழுவும் நிகழ்ச்சி, காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

தவக்கால முக்கிய நிகழ்வான பாதம் கழுவும் நிகழ்ச்சி, காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிறிஸ்தவா்கள் மேற்கொண்டுள்ள 46 நாள் தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடிய புனித வெள்ளியையொட்டி, வியாழக்கிழமை காரைக்காலில் புகழ்பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலயம் சாா்பில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இயேசு தனது சீடா்களின் பாதம் கழுவி, ஒருவருக்கொருவா் ஏற்றத்தாழ்வு இல்லை, சமமானவா்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் புனித நிகழ்வை நடத்தினாா். அதை சந்ததியினருக்கு எடுத்துக்கூறும் வகையில், ஐதீக நிகழ்வாக, நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பங்குத் தந்தை அந்தோணி லூா்துராஜ் தலைமையில் பங்கு மக்களின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தா்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனா். திரளான பக்தா்களிடையே அருட்தந்தையா்கள் உரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.