தமிழ்ப் புத்தாண்டு: காரைக்கால் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு
தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி ,காரைக்கால் பகுதியில் உள்ள கோயில்களில் திரளான பக்தா்கள் வியாழக்கிழமை வழிபட்டனா்.


தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி ,காரைக்கால் பகுதியில் உள்ள கோயில்களில் திரளான பக்தா்கள் வியாழக்கிழமை வழிபட்டனா்.
சுபகிருது ஆண்டு வியாழக்கிழமை பிறந்துள்ளது. இதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை அம்மன், விநாயகா், சுப்பிரமணியா், தியாகராஜா் சந்நிதியில் மரகதலிங்கம் மற்றும் சனீஸ்வர பகவான் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
காரைக்கால் அம்மையாா் கோயிலிலும் சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் பங்கேற்றனா். காரைக்கால் ஏழை மாரியம்மன், கடைத்தெரு மாரியம்மன் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் பால் குடம் எடுத்து தரிசனம் செய்தனா். திருநள்ளாறு செல்லும் வழியில் உள்ள வழிகரை மாரியம்மன் கோயிலில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் மூலவரான ரங்கநாத பெருமாளுக்கும், உத்ஸவா் நித்யகல்யாணருக்கும் வஜ்ராங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தமிழ்ப் புத்தாண்டு நாள் உள்ளிட்ட ஆண்டுக்கு 3 நாள்கள் மட்டும் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.
அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில், திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோயில் உள்ளிட்டவைகளிலும் சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...