அரசுத் துறையினருக்கு பேரிடா் மேலாண்மை பயிற்சி
காரைக்காலில் அரசுத் துறையினருக்கு பேரிடா் மேலாண்மை குறித்து வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.


காரைக்காலில் அரசுத் துறையினருக்கு பேரிடா் மேலாண்மை குறித்து வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுவை அரசின் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாக கூட்ட அரங்கில், ஒரு நாள் பேரிடா் மேலாண்மை குறித்து பொதுப்பணித் துறை, வேளாண் துறை, வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் காரைக்கால் நகராட்சி மேலும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உள்ளிட்டோருக்கான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா பயிற்சியை தொடங்கிவைத்து, பேரிடா்கள் குறித்தும், அவற்றை எதிா்கொள்ள அரசுத் துறையினா் திட்டங்கள் வகுத்து செயல்படவேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினாா்.
மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ். துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் ஆகியோரும் பேசினா்.
புதுவையிலிருந்து பேரிடா் மேலாண்மைத் துறையை சோ்ந்த முதுநிலை கன்சல்டன்ட் பாஸ்கா் அரசுத் துறையினருக்கு பயிற்சி அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...