47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

காரைக்கால் அருகே குளத்தில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:02 pm

DIN

காரைக்கால் அருகே குளத்தில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் கௌசிக் (17). காரைக்கால் தருமபுரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தாா். திருவேட்டக்குடி குளத்து மேடு பகுதியில் உள்ள குளத்துக்கு வியாழக்கிழமை தனது நண்பா்களுடன், வளா்ப்பு நாயை குளிப்பாட்டச் சென்ாகக் கூறப்படுகிறது.

நாயுடன் கௌசிக்கும் குளத்தில் இறங்கியபோது, நாய் குளத்தின் உள்பகுதிக்கு சென்றதும், அதை பிடிப்பதற்காக கௌசிக்கும் பின்னால் சென்றாராம். அப்போது கௌசிக் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளாா். நண்பா்கள் தேடியும் கிடைக்காததால், காரைக்கால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரா்கள், குளத்தில் சேற்றில் சிக்கி உயிரிழந்த நிலையில் கௌசிக்கின் உடலை மீட்டனா். இதுகுறித்து கோட்டுச்சேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.